
Ulavan center of social service


ஆண்டு 2024 நிறைவேற்றிய திட்டம் - 01 :
உழவன் - சமூக சேவை மையத்தின் சீரிய முயற்சியின் காரணமாகவும்,கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நமது வாரப்பட்டி ஊராட்சி சந்திராபுரத்தில் உள்ள “அரசு உதவித் துவக்கப் பள்ளி ” யை மறுசீரமைப்பு செய்துள்ளோம். முறையே பள்ளியின் மேற்கூரை,தளம்,சுற்றுச்சுவர், பள்ளி கட்டிடம் ஆகியவற்றை CSR நிதி மூலம் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பான முறையில் சீரமைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆண்டு 2024 நிறைவேற்றிய திட்டம் - 02 :
2024 ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி, V. சந்திராபுரத்தி ல் ரோட்டரி சங்கம் வின்ட்சிட்டி மற்றும் உழவன் சமூக சேவை மையம் இணைந்து ஜமாப் மற்றும் வள்ளி கும்மி ஆட்ட கிராமிய கலைக்குழுவினரின் சேவையை பாராட்டி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து ஊர் பொதுமக்களும், ரோட்டரி சங்க உறுப்பினர்களும், உழவன் சமூக சேவை மைய தன்னார்வலர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.




மோப்பிரிபாளையத்தில் பசுமை சாலைத் திட்டத்தில் பங்கேற்பு.
Dr.A.P.J அப்துல்கலாம் பிறந்தநாள் சார்பாக மாணவர்களுக்கு இலக்கண புத்தகங்கள் வழங்குதல்




New Kabbadi Ground Setup at Sultanpet Village
2025 New Kabbadi Ground Setup at Sultanpet Village