img

உழவன் சமூக சேவை மையம்

சொல் அல்ல செயல்

செயல்பாட்டில் உள்ள திட்டங்கள்

"தனி நபர் வீட்டு கழிப்பறை - சுகாதாரத்தை கருத்தில் கொண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் சுல்தான்பேட்டை பகுதியில் சுமார் 12 தனி நபர் வீட்டு கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. "

வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஜமாப் ஆட்ட பயிற்சி வகுப்பு - நமது கிராமிய கலையை ஊக்குவிக்கும் வகையில் வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஜமாப் ஆட்ட பயிற்சி வகுப்புகள் சுல்தான்பேட்டையில் நடைபெற்ற வருகிறது. இவ்வகுப்பில் குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் அரங்கேற்ற விழாவானது நடைபெற உள்ளது.

imgimg

C S R நிதி என்றால் என்ன?

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிக்குத் தேவையான மனித வளங்களையும், இயற்கை வளங்களை யும் இந்த சமுதாயத்தில் இருந்துதான் எடுத்துக் கொள்கின்றன. இதற்கு பிரதிபலனாக சமுதாயத்துக்கு திருப்பிச் செலுத்தும் நடவடிக்கை தான்சி எஸ்ஆர்.நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகளை நிறுவனங்கள் விவகாரத்துறை (Corporate affairs) அமைச்சகம் கண்காணிக்கிறது. சமூகத்தையும், பெருநிறுவனங்களை யும் இணைக்கும் பாலமாக சி எஸ் ஆர் திட்டம் செயல்பட்டு வருகிறது.

கம்பெனிகள் சட்டம் 2013-ன்படி, ரூ.500 கோடி நிகர மதிப்புகொண்ட நிறுவனங்கள் அல்லது ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ரூ.5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்கள், தங்களது முந்தைய 3 ஆண்டுகள் லாபத்தின் சராசரியில் 2 சதவீதத்தை சமூக நடவடிக்கைகளுக்கு (Corporate Social Responsibility - CSR) செலவு செய்ய வேண்டும். இந்தச் சட்டம் 2014 ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட்டது. சமூக பங்களிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை நிறுவனங்கள் நேரடியாக செலவு செய்யலாம் அல்லது தங்களது சொந்த அறக்கட்டளை மூலமாகவும், லாப நோக்கமற்ற சேவை

நீர் நிலைகளை தூர்வாருவது, அரசு பள்ளி , கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகளுக்கு சி.எஸ்.ஆர் நிதி செலவிடப்பட்டு வருகிறது. இந்தியாவில், கல்வி , மருத்துவம், ஊரக வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திறன் வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு இதுவரை அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.

“நமது உழவன் - சமூக சேவை மையம் ஒருபதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை. இதன் மூலம் மேலே கூறியவாறு நிறுவனங்களிடமிருந்து “சிஎஸ்ஆர்” நிதி பெற்று லாப நோக்கமற்ற மக்கள் சேவை பணிகளை மேற்கொள்ளலாம்”

img

கிராம சபை கூட்டம்
பங்கேற்பு

நமது ஊராட்சிக்கு உட்பட்ட 8 கிராம பொதுமக்களின் அடிப்படை குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகாமையில் தென்னை நார் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருவதாக நமது ஊர் பொது மக்களிடமிருந்து தகவல் பெறப்பட்டது. தகவலின் பெயரில் உழவன் - சமூக சேவை மையம் சார்பாக கடந்த 29.06.2024 அன்று தொழிற்சாலை உரிமையாளர் அவர்களை நே ரில் சந்தித்து கழிவுநீரால் ஏற்படும் குடிநீர் பாதிப்புகளை பற்றி தெரிவித்தோம். இது தொடர்பாக உழவன் சமூக சேவை மையத்தின் சார்பாக 05.07.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) அவர்கள் தலைமையில் தற்போது விசாரனை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக உழவன் சமூக சேவை மையத்தின் சார்பாக 05.07.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) அவர்கள் தலைமையி ல் தற்போது விசாரனை நடைபெற்று வருகிறது.

15.08.2024 சுதந்திர தினத்தன்று சுல்தான்பேட்டையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குடிநீர் ஆதாரத்திற்கு பாதிப்படையும் வகையில் அமையவிருக்கும் தென்னை நார் தொழி ற்சாலை யை தடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிக்கு உட்பட்டு தண்ணீர் இருந்தும் செயல்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றை இயக்கக் கோரியும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தியிருந்தோம்.

மேலே வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் படாததால், நமது கிராம பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தீர்மானங்களை நிறைவேற்ற உழவன் - சமூக சேவை மையத்தின் உறுப்பினர்கள் 02.10.2024 காந்தி ஜெயந்தி அன்று புளியமரத்துபாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டோம். கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற பெரும்பான்மையான வார்டு உறுப்பினர்கள் இல்லாதகாரணத்தாலும், கிராம சபை கூட்டம் நடை பெறுவது குறித்து 7 நாட்களுக்கு முன்பு பொது மக்களுக்கு தகவல் கொடுக்காத காரணத்தினாலும் கூட்டத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தினோம். ஊராட்சி மன்றம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வார்டு உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டு கூட்டம் நடத்த அனுமதித்தோம்.

பின்பு இக்கூட்டத்தில் தென்னை நார் தொழிற்சாலையால் ஏற்படும் குடிநீர் பாதிப்புகள் குறித்தும், ஆழ்துளைக்கிணற்றை இயக்க வேண்டிய தேவை குறித்தும் வலியுறுத்தி உரிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

மேலும், சந்திராபுரத்தில் இருந்து புளியமரத்துப்பாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள டயர் எரிக்கும் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊர் பொதுமக்களும், உழவன் சமூக சேவை மையம் சார்பாக கிராம சபையில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளும்படி வலியுறுத்தினோம்.

இனிவரும் காலங்களிலும் உழவன்- சமூக சேவைமையத்தின் சார்பாகஅனைத்துகிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பொது மக்களின் நலனுக்காக தீர்மானங்கள் நிறைவேற்ற பாடுபடுவோம்!!!

நாடாளுமன்றம், சட்ட மன்றம் போல கிராமங்களின் வளர்ச்சிக்கா உருவாக்ப்பட்ட ஒரு அமைப்பு தான் கிராம சபைகூட்டம். ஜனநாயகத்தில் அனைவருக்கும் பொறுப்பு, கடமை, உரிமை இருக்கிறது. மக்களின் பங்களிப்பு முக்கியமானது. இதை அனைவரும் சிந்தித்து பார்த்து இனி வரும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று நமது ஊராட்சியின் வளர்ச்சிக்காக ஒன்று படுவோம்!

img